வாரிசு படத்தின் நீக்கப்பட்டிருந்த காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியானது.

தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் அமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

50 நாட்களைக் கடந்தும் ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் இப்படத்திலிருந்து தற்போது டெலிட் செய்யப்பட்டிருந்த காட்சிகளின் வீடியோவில் இருந்து 4 நிமிடம் 11 வினாடிக்கொண்ட காட்சியை அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பிரகாஷ்ராஜியிடம் கில்லி ஸ்டைலில் விஜய் மாஸாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.