வாரிசு திரைப்படத்தின் 50 ஆவது நாளை கொண்டாடிய தளபதி ரசிகர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியான இப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது ஓ டி டி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாள் ஆகி இருப்பதை தளபதி ரசிகர்கள் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.