தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் பலர் மீ டு மூலமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி பேசி வருகின்றனர்.

இதனால் திரையுலகே பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இது போன்ற சமூகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகளை பற்றி வரலக்ஷ்மி சரத்குமார் ஜெயா டிவியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவில் தான் சிறுவயதில் 5 பேரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியதாகவும் இதனால் இது போன்ற குற்றங்களை எதிர்த்து பேச தான் வந்திருப்பதாக கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/Bo1YuuRHRKc/?taken-by=varusarathkumar

இந்த வீடியோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறை மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.