தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்துள்ள வரலக்ஷ்மி சரத்குமாரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மிக்கு விரைவில் திருமணம் என ஒரு செய்தி வைரலாக இது வெறும் வதந்தி சினிமாவில் நான் வளர்வதை பிடிக்காமல் வேலை இல்லாதவர்கள் பொறாமையை செய்யும் வேலை என கோபமான ட்வீட் செய்துள்ளார்.

பிஸியாக நடித்து வரும் வரலக்ஷ்மி தற்போது ஜெயா டிவி மூலம் தொகுப்பாளியாகவும் அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.