
நடிகர் சரத்குமாரால் 3 ஹிட் படங்களை தவறவிட்டதாக வரலட்சுமி சரத்குமார் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் குணச்சித்திர வேடம், வில்லி என எதுவாக இருந்தாலும் நடித்து அசத்தி வருகிறார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு போது சரத்குமாரால் கைவிட்டுப் போன மூன்று சூப்பர் ஹிட் படங்கள் குறித்து பேசியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவுக்கு பதில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அப்பா நடிக்க விடல எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பரத் நடிப்பில் வெளியான காதல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிகர் சரத்குமார் நடிக்க அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.