வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது சர்தார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜப்பான், சர்தார் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த இவர் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்து இருக்கிறார்.

இப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் முதல் பாடலான ‘அக நக’ என்னும் பாடல் வரும் 20ஆம் தேதியான நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளது.

இதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் குந்தவையை தொடர்ந்து வந்தியத்தேவன் கதாபாத்திரம் உருவான மேக்கிங் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.