வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் காலமானார்.

தமிழ் சினிமாவின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார்.

இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து கொண்டு மூன்றும் விவாகரத்தில் முடிந்தது.

இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்ற கிராபிக்ஸ் டிசைனர் இயக்குனரை காதலித்து கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். குறிப்பாக இவர்களில் பிரிவுக்கு பீட்டர் பாலின் குடிப்பழக்கமே காரணமாக இருந்தது.

இப்படியான நிலையில் பீட்டர் பால் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.