பிக் பாஸ் ராபர்ட் மாஸ்டரின் மனைவி மற்றும் குழந்தை யார் என கிழித்து தொங்கவிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் கோலாகலமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஆறு நாட்களாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் ராபர்ட் மாஸ்டரின் மனைவி யார்?? கிழித்து தொங்கவிட்ட வனிதா விஜயகுமார் - வெளியான ஷாக் தகவல்கள்

மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த 20 போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே சென்று இருப்பவர் தான் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். இவரும் வனிதா விஜயகுமார் அவர்களும் காதலித்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவர் என்னை டார்ச்சர் செய்ததாக ராபர்ட் மாஸ்டர் தெரிவித்து இருந்தார்.

இப்படியான நிலையில் வனிதா பிரபல ஊடகம் ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனங்களை கூறி வரும் நிலையில் சமீபத்தில் பேசிய வீடியோவில் ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசி உள்ளார். அவரை நான் என்னுடன் பப்ளிசிட்டிக்காக மட்டும் தான் வைத்திருந்தேன். மற்றபடி எங்களுக்கிடையில் எதுவும் இல்லை. நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரை நான் பார்த்த செய்ததாக பேட்டி அளித்ததாக கேள்விப்பட்டேன்.

பிக் பாஸ் ராபர்ட் மாஸ்டரின் மனைவி யார்?? கிழித்து தொங்கவிட்ட வனிதா விஜயகுமார் - வெளியான ஷாக் தகவல்கள்

அவர் தன்னிடம் 2007 ஆம் ஆண்டு தனக்கு திருமணமானதாகவும் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறினார். ஆனால் அவருடைய மனைவி யார் குழந்தை யார் என்பது இதுவரை தெரியாது. அது மட்டுமல்லாமல் அந்த திருமணத்திற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட திருமணங்கள் நடந்து விட்டதாக வனிதா ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசி கிழித்து தொங்க விட்டுள்ளார்.

ராபர்ட் மாஸ்டர் குறித்து இவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.