Vanathai Pola Serial Update

வானத்தைப்போல சீரியலில் இருந்து ஸ்வேதா விலகியதை தொடர்ந்து சின்ராசு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vanathai Pola Serial Update : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவர் நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் அவர் தற்போது சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதை இந்த சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Pushpa Public Review | Allu Arjun | Rashmika Mandanna | Samantha | Pushpa FDFS Review | Tamil | HD

இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஸ்வேதாவை தொடர்ந்து சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமன் குமாரும் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Pushpa Public Review | Allu Arjun | Rashmika Mandanna | Samantha | Pushpa FDFS Review | Tamil | HD

கிரிக்கெட் டுடே :
வார்னர்-லாபஸ்சேன் மிரட்டல் : இங்கிலாந்து அணி மிரட்சி..

இந்த சீரியலில் மிகப்பெரிய தூண்களாக இருந்து வரும் இவர்கள் இருவருமே சீரியலில் இருந்து விலகி விட்டால் அது நிச்சயம் சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இனி எதுக்கு இந்த சீரியல்? மொத்தமா முடித்து விடுங்கள் என கூறி வருகின்றனர்.