முதல் முறையாக தன்னுடைய காதலியை அறிமுகம் செய்துள்ளார் சீரியல் நடிகர் கார்த்தி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று வானத்தைப்போல. அண்ணன் தங்கையின் பாச கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் துளசியின் கணவராக ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கார்த்தி.

இதற்கு முன்னதாக இவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்துள்ளார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் முதல் முறையாக தன்னுடைய காதலியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

ஆமாம் மேக்கப் ஆர்டிஸ்ட் காயத்ரி என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாடும் காயத்ரிக்கு வாழ்த்துக்கள் உடன் ஐ லவ் யூ சொல்லி ஸ்டோரியில் தெரியப்படுத்த அதற்கு காயத்ரியும் பதிலுக்கு தேங்க்யூ செல்லமே என தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி மூலம் ரிப்ளை செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கார்த்திக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.