![Valimai Valimai](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2020/02/Valimai-2-696x400.jpg)
வலிமை வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புது தகவல் ஒன்று கசிந்துள்ளது.
Valimai Villian Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் நடிக்கிறார், யுவன் இசையமைக்கிறார், வினோத் இயக்குகிறார், போனி கபூர் தயாரிக்கிறார் என்பதை தவிர நடிகர் நடிகைகள் பற்றி ஒரு அப்டேட்டை கூட கொடுக்கவில்லை படக்குழு.
மேலும் வில்லன் யார்? நாயகி யார்? என்பது கூட இதுவரை தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இவர் தான் வில்லன் என ஒவ்வொரு நடிகர்களின் பெயர் அடிபடுகிறது.
அந்த வரிசையில் தற்போது அஜித்துடன் ஏகன் படத்தில் இணைந்து நடித்திருந்த தெலுங்கு நடிகரான நவ்தீப் தான் தற்போது வலிமை வில்லன் என கூறப்படுகிறது.
சீறு படத்தில் இவர் தான் ஜீவாவுக்கு வில்லனாக நடித்திருந்தார். தற்போது 12 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.