தென்னிந்திய சினிமாவிலேயே முதல் முறையாக மிக நீளமான டிரைலராக வலிமை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Trailer Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெகு விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் நேற்று ட்ரைலர் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் வலிமை படத்தின் டிரைலர் 2 நிமிடம் 50 நொடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரில் எந்தவித வசனம் இடம்பெறாது. படத்தின் கதா பாத்திரங்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரைலரில் படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பதும் அறிவிக்கப்பட்டு விடும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.