திடீரென படத்தின் ஷோக்கள் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Valimai Shows Cancelled in France : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

தமிழகம் தவிர்த்து மற்ற இடங்களில் படத்தில் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இன்னும் ஓரிரு நாளில் புக்கிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் வலிமை படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கான சரியான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.