அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள வலிமை படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Valimai Movie Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். எக்ஸ் வினோத் இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

மதுரையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் அஜித்துக்கு ஒரு ஊதாரி தம்பி மற்றும் ஒரு தங்கை உள்ளனர். கார்த்திகேயா தலைமையில் ஒரு டீம் பைக் ரேஸர் போல போதைப் பொருட்களை கடத்துகிறது. இந்த டீமை கண்டுபிடித்து அவர்களை பிடிக்க காவல்துறை அஜித்தை நாடுகிறது. இப்படியான நிலையில் இந்த கும்பலுடன் சேர்ந்து அஜித்துக்கு எதிராக மாறுகிறார் தம்பி. அதிலிருந்து எப்படி தன்னுடைய தம்பியை மீட்டுக் கொண்டு வருகிறார், அஜித் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

வழக்கம் போல் அஜித் இந்த படத்திலும் மாஸான நடிப்பால் மிரள வைத்துள்ளார். பைக் ஸ்டன்ட், ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிறார். ஒவ்வொரு சண்டைக்காட்சியில் புது விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எமோஷன் காட்சிகளில் உருக வைக்கிறார்.

அஜித்துக்கு பக்கா வில்லனாக டஃப் கொடுக்கிறார் நடிகர் கார்த்திகேயா. அவருடைய உடல்வாகு அவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஹீமா குரோஷி நடிப்பு கச்சிதம். டெக்னிகலான போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார். அவரும் ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது. நாங்க வேற மாதிரி பாடல் மதுரை திருவிழாவாக மாஸ் காட்டுகிறது.

திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் வேற லெவல். ஒரு சண்டைக்காட்சியும் பக்கா வெறித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்ஒன்று படங்களில் ஏற்கனவே தன்னுடைய திறமையை நிலைநாட்டிய வினோத் வலிமை படத்தின் மூலம் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் எமோஷன் என அனைத்திலும் கவனம் செலுத்தி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக வலிமையை உருவாக்கியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. நடிகர் நடிகைகள் நடிப்பு

2. மிரள வைக்கும் ஸ்டன்ட் காட்சிகள

3. வசனங்கள்

4. கிளைமாக்ஸ்

தம்ப்ஸ் டவுன் :

1. ஆரம்பத்தில் படம் கொஞ்சம் மெதுவாக செல்வதுபோல் இருக்கிறது.

REVIEW OVERVIEW
வலிமை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
valimai-movie-reviewமொத்தத்தில் வலிமை மிரட்டல் ஆக்ஷன் திருவிழா