வலிமை படத்திலிருந்து வெளியாக உள்ள அம்மா பாடல் ப்ரோமோ வீடியோக்கே அஜித் ரசிகர்கள் செம வரவேற்பு கொடுத்துள்ளனர்.

Valimai Mother Song Promo Record in YouTube : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் ஹூமா குரோஷி நாயகியாக நடிக்க கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் பல நடிகர் நடிகைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பிரதோஷ கால சிவ வழிபாடு : கிடைக்கும் பலன்கள்..

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியான நிலையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு அம்மா பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று ப்ரோமோ வீடியோ ஒன்றில் வெளியான நிலையில் அந்த வீடியோ 3 மில்லியன் பார்வையாளர்கள் உடன் யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

அவர்தான் என்னை Hero-வா ஆக்குனாரு – Actor GV.Prakash Latest Speech | Rebel Movie Pooja

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பாடலில் ப்ரோமோ வீடியோவுக்கே இப்படியா என வியந்து வருகின்றனர். இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.