Valimai First Look Update
Valimai First Look Update

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாக போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Valimai First Look Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வலிமை ஃபர்ஸ்ட்லுக் வெளியிட வேண்டாம்.. வெளியான ஷாக்கிங் அப்டேட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியும் படக்குழு வலிமை பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. இதனால் தல அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

ஆனால் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால் தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக்கை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியிடலாம் என்று தல அஜித் படக்குழுவினரிடம் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த அப்டேட்காக காத்திருந்த தல ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.