Vaishali About Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் இருந்து விலகியது ஏன் என நடிகை வைஷாலி விளக்கம் அளித்துள்ளார்.

Vaishali About Pandian Stores : தமிழ் சின்னத் திரையில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பத்தின் பெருமையை பேசும் சீரியலாக இது இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலில் ஒரு சிறு வேடத்தில் நடித்து வருபவர் வைஷாலி. தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏன் சீரியலில் இருந்து விலகினீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்து வைசாலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து என்னை ஏன் நீக்கினார்கள் என எனக்கு நிச்சயம் தெரியவில்லை. எனக்கு இந்த சீரியலில் பெரிய அளவில் காட்சிகள் இல்லை. இருந்தாலும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.