தனது பாடலுக்கு கவர் சாங் உருவாக்கிய அக்ஷரா சரணை வைரமுத்து அழைத்து பாராட்டியுள்ளார்.

Vairamuthu Wishes to Nakshatra Saran : சென்னையை சேர்ந்தவர் நக்ஷா சரண். பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், பல வருடங்களுக்கு முன்பு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் இன்றைய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளிவந்த முதல் திரைப்படமான ரோஜா படத்தில் இடம் பெற்ற “புது வெள்ளை மழை” எனும்பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டது.

இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் நக்ஷா சரண், தற்போது இந்த பாடலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.

தனது வைர வரிகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாடலாசிரியர் வைரமுத்து ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்த கவர் பாடலை யூடியூபில் பார்த்துவிட்டு, நக்ஷா சரணை பாராட்டினார்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.