தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை படத்தில் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் வடசென்னை. இப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
வடசென்னை மக்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாக காட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் விஜயின் ரசிகர் மன்ற பேனர் இடம் பெற்றுள்ளது.
இதனால் இதனை தனுஷ் ரசிகர்களுடன் சேர்ந்து விஜய் ரசிகர்களும் கொண்டாட தயாராகி வருகின்றனர்.