வாத்தி திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று உலக அளவில் 8 நாட்களில் 75 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது.

இதனால் தனுஷ் ரசிகர்கள் மற்றும் வாத்தி படக்குழுவினர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் கேக் வெட்டி செலபிரேட் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.