வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கும் “வாத்தி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 8 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான சிறப்பான போஸ்டர்கள் இணையத்தில் ரசிகர்களால் உற்சாகத்துடன் வைரலாகி வருகிறது.