வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் டைமிங் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 17ஆம் தேதி தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வெளியாகவுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று வெளியாக இருப்பதாக படக்குழு நேற்றைய தினம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வாத்தி ட்ரைலர் இன்று மாலை 5:04 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு புதிய போஸ்டருடன் பகிர்ந்துள்ளது. இதனால் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இத்தகவலை வைரலாக்கி வருகின்றனர்.