வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 17ஆம் தேதி தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வெளியாக உள்ளது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு நேற்றைய தினம் அறிவித்து இருந்தது.

அதன்படி அனல் பறக்கும் வாத்தி திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6:30 மணிக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.