ஸ்பெஷல் பிரிமியர் ஷோவை தொடர்ந்து பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பெற்று வரும் வாத்தி திரைப்படம்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கி அட்டூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாகவுள்ளது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஸ்பெஷல் பிரிமியர் ஷோ திரை விமர்சர்களுக்காக திரையிடப்பட்டது.

அதன் பிறகு திரைவிமர்சகர்கள் வாத்தி திரைப்படம் எதிர்பார்த்ததை விட எமோஷன லாக இருந்ததாகவும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக இருந்ததாகவும் பாராட்டி பாசிடிவ் ஆன ரிவியூக்களை கொடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் இப்படமும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை போல் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடையும் என கருத்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.