வாத்தி திரைப்படத்தின் புது பிரமோஷன் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் 17ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கல்வி சம்பந்தமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் நிலையில் இப்படத்தின் புதுப்புது பிரமோஷன் வீடியோக்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வர இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் படக்குழு வெளியிட்டு இருக்கும் புது ப்ரோமோஷன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.