தனுஷின் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாத்தி.

வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? ஜிவி பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பு

தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கி வரும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

தனுஷின் வரிகளில் இந்த படத்தில் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என ஏற்கனவே ஜிவி பிரகாஷ் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது புதிய பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? ஜிவி பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பு

இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு விரைவில் தரமான ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது என எதிர்பார்க்கலாம்.