வி3 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். நாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம், வில்லி என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடத்தி வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் வி 3. வரலட்சுமி சரத்குமாருடன் பாவனா, எஸ்தர் அணில், ஆடுகளம் நரேன், பொன்முடி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். படத்தை அமுதவாணன் இயக்க ஹெலன் செபஸ்டியன் இசையமைத்துள்ளார். டீம் ஏ ventures நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அநீதியையும் அதற்கு நீதி கேட்டு மக்கள் போராடுவதையும் மையமாகக் கொண்டு இந்த கதைக்களம் உருவாகி இருப்பது ட்ரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி விந்தியா என்ற பெண்ணுக்கு நடந்தது என்ன? கடைசியில் அவரது மரணத்திற்கு கிடைத்த தீர்ப்பு என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஜனவரி 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி விறுவிறுப்பையும் பரபரப்பையும் கூட்டுகிறது. பலரும் ட்ரைலர் குறித்து கருத்துக்களை பதிவு செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.