காதல் விவகாரம் குறித்து தி லெஜன்ட் பட நாயகி அளித்துள்ள விளக்கம் வைரல்.

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகை மற்றும் பிரபல மாடல் ஆகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் ஊர்வசி ரவுடேலா. இவர் பெரும்பாலும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் சரவணன் அருளுடன் இணைந்து தி லெஜண்ட் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரீட்சைமான இவர் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் தொடர்பில் இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் இணையதளத்தில் பரவி வந்தது.

இந்நிலையில் இது குறித்து ஊர்வசி அளித்திருக்கும் விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், இது முட்டாள்தனமான ஒப்பீடு என்று கடுமையாக திட்டி தீர்த்துள்ளார். மேலும் தனக்கு நடிகர்களை விட கிரிக்கெட் வீரர்கள் மீது அதிக மரியாதை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.