வாலி படத்தில் சிம்ரன் ஜோதிகா அதுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Vaali Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் வாலி.

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அஜித்தின் கற்பனை காதலியாக ஜோதிகா நடித்து இருந்தார்.

ஆனால் இவர்களது கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை கீர்த்தி ரெட்டி மற்றும் ரோஜா தான் என சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கூட வெளியான பிறகுதான் நாயகிகள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை?

சிம்ரன் வேடத்தில் நடிக்க இருந்த கீர்த்தி ரெட்டி வேறு யாருமில்லை. நடிகர் இயக்குனர் என பன்முக திறமைகள் கொண்ட பிரபுதேவா நடிப்பில் வெளியான நினைவிருக்கும் வரை என்ற படத்தில் நடித்த நாயகி தான்.

என் படம்னாலே பிரச்சனை பன்றாங்க! – Silambarasan Emotional Full Speech | Maanaadu Pre Release Event

மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் தேவதை, நந்தினி, இனியவளே, ஜாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. தமிழைப் போலவே தெலுங்கு மொழியிலும் இவருக்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாலி படத்தில் கிடைத்த வாய்ப்பை கரெக்டாக கேட்ச் செய்து நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்திருப்பார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.