அஜித் வில்லன் மற்றும் விஜய் ஹீரோ என்ற கூட்டணியில் வெளியாக இருந்த திரைப்படம் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்களுக்கு அடுத்ததாக அந்த இடத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தக்கவைத்து வருகின்றனர்.

அஜித் வில்லன், ஹீரோ விஜய் காம்போவில் வெளியாக இருந்து மிஸ்ஸாகி ஹிட்டான திரைப்படம் - இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்.!!

இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை ராஜாவின் பார்வையிலே என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்துள்ளனர். அதன் பிறகு இவர்களது கூட்டணியில் எந்த படமும் வெளியாகவில்லை.

தற்போது வரை வெங்கட் பிரபு இருவரையும் வைத்து படத்தை இயக்கப் போவதாக கூறி வருகிறார். இப்படியான நிலையில் இவர்களை மனதில் வைத்து கதையை எழுதி கடைசியில் இவர்கள் இல்லாமல் வேறு நடிகர்களை வைத்து ஹிட்டான படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆமாம் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற தனி ஒருவன் திரைப்படத்தில் தான் அஜித் மற்றும் விஜய் இணைந்து நடிக்க இருந்துள்ளனர்.

அஜித் வில்லன், ஹீரோ விஜய் காம்போவில் வெளியாக இருந்து மிஸ்ஸாகி ஹிட்டான திரைப்படம் - இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்.!!

மோகன் ராஜா அஜித்தை வில்லனாகவும் விஜய்யை ஹீரோவாகவும் வைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். ஆனால் சில காரணங்களால் இது நடக்காமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் தான் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து இந்த படத்தை பண்ணுமாறு பரிந்துரை செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

செம மாஸ் ஹிட்டான இந்த படத்தில் ஒருவேளை அஜித் மற்றும் விஜய் இணைந்து நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களோடு கமெண்டில் ஷேர் பண்ணுங்க.