சண்டக்கோழி படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Unknown Secrets of Sandakozhi : தமிழ் சினிமாவில் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருப்பார்.

சண்டக்கோழி படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..? சம்பள பிரச்சனையால் ஆளை மாற்றிய இயக்குனர்

சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து சண்டக்கோழி 2 படத்தை இயக்குநர் லிங்குசாமி. இந்த படத்திலும் விஷால் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்தார். ஆனால் முதல் பாகத்தை போல இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

இப்படியான நிலையில் தற்போது முதன் முதலாக வெளியான சண்டக்கோழி படத்தில் நாயகியாக நடிக்க இருந்தது மீரா ஜாஸ்மின் இல்லை என தெரிய வந்துள்ளது. இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தின் கதையை முதலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் தான் கூறியுள்ளார்.

சண்டக்கோழி படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..? சம்பள பிரச்சனையால் ஆளை மாற்றிய இயக்குனர்

அவர் கேட்ட சம்பளத்தை தர முடியாத காரணத்தினால் படக்குழு கடைசியில் மீரா ஜாஸ்மினை நாயகியாக தேர்வு செய்துள்ளது.