சாமி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Unknown Secrets of Saamy Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சாமி. 2003ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார்.

மாடல் அழகிகள் மர்ம மரணம் : 6 பேர் கைது..திடுக்கிடும் தகவல்கள்..

விறுவிறுப்பான திரைக்கதையோடு வெளியான இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் ரமேஷ்கண்ணா உட்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Simbu நடிப்பை பார்த்து கண்டிப்பா அழுவீங்க! – Director Venkat Prabhu Speech | Maanadu Audio Launch

குறிப்பாக இந்த படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது இயக்குனர் ஹரி இந்த படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து எழுதியுள்ளார். ஆனால் அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் விக்ரமை வைத்து படத்தை இயக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாமி 2 திரைப்படம் வெளியானது. ஆனால் முதல் பாகத்தைப் போல இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.