மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா இல்லை என முதல்முறையாக உண்மையை உடைத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.

தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு பொதுச்சொத்துகளை சுரண்டும் சாமியார்களை பற்றி பேசும் படமாக அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது நயன்தாரா இல்லை என தெரிவித்துள்ளார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.

ஆமாம் முதல் முதலாக இந்த படத்தின் கதையை நடிகை அனுஷ்காவிடம் தான் சொல்லி உள்ளார். அவருக்கு கதை பிடித்து போய் உள்ளது. ஆனால் பங்கேற்க 8 மாதமாகும் என தெரிவித்த காரணத்தினால் அவ்வளவு நாள் பொறுத்து இருக்க முடியாது என இந்த கதையை நயன்தாராவிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னரே இந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றதாக இயக்குனர் ஆர் ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.