சிம்புவுடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவறவிட்டு உள்ளார் நடிகர் தனுஷ்.

Unknown Secrets of Kedi Billa and Kiladi Ranga : தமிழ் சினிமாவில் அஜித்-விஜய் போல கடுமையான போட்டி உள்ள நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு. இவர்களது ரசிகர்கள் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் எலியும் பூனையும் ஆகவே இருந்து வருகின்றனர்.

இன்றைய ராசி பலன்.! (21.7.2021 : புதன் கிழமை)

இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அவரது ரசிகர்கள் இடையே இருக்கும் பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அது எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தனுஷ் தான் தவற விட்டுள்ளார்.

ஆம் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம்பெற்ற ஒரு பொறம்போக்கு என்ற பாடலை சிம்புவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடினர். ஆனால் இந்த பாடலை சிம்புவும் தனுஷும் இணைந்து பாட வேண்டியது. அப்போது தனுஷ் மரியான் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் சிக்கிக் கொண்டதால் இந்த வாய்ப்பை தவறவிட்டார். அதன் பிறகு தான் தனுஷூக்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இந்தப் பாடலை பாடியுள்ளார்.

நாடு திரும்பிய Rajinikanth-க்கு மகள் கொடுத்த Surprise – மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!