விஜய்க்கு சொன்ன கதையின் இறுதியில் விஷால் நடித்த அந்த படம் படுதோல்வியை சந்தித்தது குறித்து தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Action Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம், அஜித்தை வைத்து உன்னைத்தேடி என பல முன்னணி நடிகர்களை வைத்தே பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

மெகா சாம்பியன் ரோஜர் பெடரருக்கு, காலில் மீண்டும் ஆபரேஷன் : இனி ஆடமுடியுமா.?

இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்த படம் தான் ஆக்சன். இந்த படத்தில் விஷால் மற்றும் தமன்னா ஆகியோர் ஜோடி செய்து நடித்திருந்தனர். முதலில் இந்த படத்தின் கதையை விஜயிடம் தான் கூறியுள்ளார் சுந்தர் சி. கதை கேட்ட விஜய் முதல் பாதி ஓகே இரண்டாம் பாகம் நல்லா இல்லை எனக்கூறி படத்தை நிராகரித்துள்ளார்.

வருமான வட்டி விவகாரம் – மேல்முறையீடு செய்ய சூர்யா தரப்பு முடிவு! | Latest Cinema News

ஒருவேளை சுந்தர் சி இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தால் இதுதான் அவர்கள் இணையும் முதல் படமாக இருந்திருக்கும். ‌‌ ‌‌இதனையடுத்து தான் இந்த படத்தின் கதையை விஷாலிடம் கூறி அவரை நடிக்க வைத்துள்ளார் சுந்தர் சி.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.