Udhayanidhi Stalin for Tiruvarur bypolls
Udhayanidhi Stalin for Tiruvarur bypolls

Udhayanidhi Stalin for Tiruvarur bypolls – சென்னை: ‘திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் உதயநிதி ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா’ என அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

இந்நிலையில்,வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தற்போது தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.

திருவாரூரில் போட்டியிட திமுக சார்பாக விருப்ப மனுக்கள் கடந்த திங்கள் கிழமையில் இருந்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேட்பாளர் தாக்கலை திமுக பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று வேட்பாளர்கள் நேர்முக தேர்வு நடத்தப்படும். மேலும் இன்றே திமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ‘நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்’.

“திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது”.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த திமுக வேட்பாளர் விருப்ப மனு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இவரது விருப்ப மனுவும் பரிசீலனையில் உள்ளது என்பது குறி்பிடத்தக்கது.