விஜயின் அரசியல் குறித்து உதயநிதி பகிர்ந்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு சில நற்பணித் திட்டங்களை செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி எடுத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார். அப்போது அரசியல் குறித்தும் மேடையில் பேசிய விஜயின் கருத்திருக்கு பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர்.

அந்த வகையில், மாமன்னன் திரைப்படத்தின் பிரமோஷன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் உதயநிதி அவர்கள் சமீபத்திய பேட்டியில் விஜய்யின் அரசியல் நகர்வு குறித்த கேள்விக்கு அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது. அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிகர் விஜய் முதலில் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவிக்கட்டும், பின்பு தனது கொள்கைகளை சொல்லட்டும். அதன் பிறகு தான் அவரை ஆதரிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்பதை சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார். இந்த பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.