வாரிசு படத்தை நான் ரிலீஸ் பண்ணல என உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வாரிசு படத்தை ரிலீஸ் பண்ணல.. ஆனால்?? உதயநிதி அளித்த அதிரடி பேட்டி

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்குவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் வாரிசு படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த படத்தை வாங்கவில்லை. இந்த நிலையில் தற்போது உதயநிதி பேட்டி ஒன்றில் வாரிசு திரைப்படத்தை நான் வெளியிடவில்லை. வரும் காலங்களில் விஜய் படங்களை வெளியிட முயற்சி செய்வேன் என தெரிவித்துள்ளார். மேலும் வாரிசு திரைப்படம் வெற்றி பெற விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.

வாரிசு படத்தை ரிலீஸ் பண்ணல.. ஆனால்?? உதயநிதி அளித்த அதிரடி பேட்டி

உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவரது நடிப்பில் இன்று மகிழ்ச்சியில் இயக்கத்தில் கலகத் தலைவன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.