இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இந்தியன். பல வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகிறது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் காஜல் அகர்வால் இந்த படத்தில் விலகுவதாகவும் தகவல் வெளியானது. தற்போது காஜலும் குழந்தை பெற்றுவிட்ட நிலையில் இந்த படத்தில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினும் இணை தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார். இப்படியான நிலையில் செப்டம்பர் மாதம் முதல் படத்தின் சூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்பதை உறுதி செய்யும் விதத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனால் இந்தியா 2 படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.