two promising actors joining thalapathy vijay-69 movie..
two promising actors joining thalapathy vijay-69 movie..

தளபதி-69 படத்தில் பிரபல நடிகர்கள் ஒப்பந்தமாகி வைரலாய் தெறிக்கிறது. அவர்கள் யார் யார்? என்பது பற்றி பார்ப்போமா? வாங்க..

தளபதி விஜய், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் பயணிக்க உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில், ஏற்கனவே “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் வெளியாகி உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறி உள்ள நிலையில், இயக்குனர் வினோத் இயக்கத்தில் தனது 69-வது மற்றும் இறுதி திரைப்படத்தை நடிக்க உள்ளார்.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில், தளபதி விஜய் உடன் “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து அசத்திய பிரபல நடிகை பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனை தொடர்ந்து, நடிகர் நரேன் தளபதி-69 திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘அஞ்சாதே’ திரைப்படம் தொடங்கி பல வெற்றி திரைப்படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நரேன்.

இறுதியாக லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். தொடர்ச்சியாக, பல திரைப்படங்களில் நரேன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏற்கனவே தளபதி விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, போக்கிரி மற்றும் வாரிசு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அசத்திய நடிகர் பிரகாஷ்ராஜ் தளபதி-69 திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.

தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் என்று பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான “ராயன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்று பிரகாஷ்ராஜ், த்ரிஷாவை செல்லம்னு சொன்னது போல, இன்று பூஜா ஹெக்டேவை வெல்லம்னு சொல்வாரோ.? வெயிட்டிங்..