
விடாமுயற்சி படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக உள்ள இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் அதற்காக சில நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் பரவியுள்ளது.
அந்த நடிகைகள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கத்ரீனா கைப் மற்றும் கங்கனா ரனாவத் ஆகிய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நடிகைகளில் இரண்டு பேருக்கு தான் விடாமுயற்சி படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அஜித்துக்கு ஜோடியாக யார் யார் நடித்தால் சூப்பராக இருக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்