லியோ படத்திலிருந்து திரிஷா விலகியதாக வெளியான தகவலுக்கு அவரது தாயார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தற்போது தளபதி விஜய் ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள லியோ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், தாமஸ் மாதீவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று வருவதால் படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். ஆனால் மூன்று நாளில் திரிஷா சென்னை திரும்பியதாக புகைப்படங்களும் தகவலும் இணையத்தில் வெளியாக அவர் படத்தில் இருந்து விலகி விட்டார் எனவும் அவரது காட்சிகள் முடிவடைந்து விட்டன. வழக்கமாக லோகேஷ் படத்தில் நாயகி இறந்து விடுவார்கள் அதே போல் இந்த படத்தில் திரிஷா இறந்துவிட்டார் போல எனவும் கருத்துக்கள் பரவி வந்தன.

இதுகுறித்து திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் அளித்த பேட்டி ஒன்றில் திரிஷா சென்னை திரும்பவில்லை. அவர் தொடர்ந்து காஷ்மீரில் இருந்து படப்பிடிப்பின் கலந்து கொண்டு தான் வருகிறார் என கூறி திரிஷா குறித்து பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.