நடிகை திரிஷா கோலிவுட் தயாரிப்பாளர்களிடம் அதிக அளவில் சம்பளம் கேட்டு கதற வைத்திருக்கிறார். அதற்கான காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் இருபது வருடம் மேலாகியும் டாப் நடிகையாக தற்போது வரை இளமையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை தான் திரிஷா. அதிக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் திரிஷா அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியாகி வைரலானது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளிவராமல் இருந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக திரிஷா தயாரிப்பாளர்களை கதற வைத்து வருகிறார்.

அதாவது நடிகை திரிஷாவுக்கு தற்போது மார்க்கெட் குறைந்திருக்கும் காரணத்தால் லட்சக்கணக்கில் மட்டும் சம்பளத்தை வாங்கி இருக்கிறார். ஆனால் தற்போது விஜயின் தளபதி 67 பட பேச்சுவார்தைக்கு பின்னர் தனது சம்பளத்தை 1.25 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இதனால், திரிஷாவை புக் செய்ய நினைத்த தயாரிப்பாளர்கள் கதறி வருகின்றனர். இந்தக் காரணத்தை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.