சிம்புவின் திருமணம் பற்றிய கேள்விக்கு டி.ஆரின் விளக்கம் வைரல்.

கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வெளியிட்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் சிம்புவின் திருமணம் பற்றி சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் சிம்புவின் தந்தையும் கோலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான T.R. ராஜேந்திரன் அவர்கள் அண்மையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சிம்புவின் திருமணம் பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடைபெறும், எனக்கோ என் மனைவி கோ பிடித்தபடியான மருமகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சிம்புவிற்கு பிடித்த பெண் கிடைத்தால் போதும், விரைவில் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.