ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2023) செப்டம்பர் மாதம் (8 – 10, 2023) நடைபெறவுள்ளது.

உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன.

இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

கனடிய அரசு கனடாவில் வாழும் தமிழர்களை சகல வழிகளிலும் அவர்களது கலை, கலாச்சார நிகழ்வுகளை அங்கீகரித்து, அதற்க்கான சகல ஒத்துழைப்பை வழங்குவதோடு அரசு தலைவர்கள் வரை தமது பங்களிப்பினை சிறப்பாக செய்துவருகின்றார்கள்.

எனவே, கனடாவில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமைகின்றது..

[அத்துடன் உலகில் நடக்கும் மிகவும் பெரிய திரைப்பட விழா என அறியப்பட்ட Toronto International (TIFF) திரைப்பட விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெறவுள்ளதால், ரொரான்ரோ வரும் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், இந்த இரண்டு விழாக்களிலும் பங்குபற்றக்கூடிய வாய்ப்பாக இந்த திகதிகள் அமைகின்றன.]

பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை.

நிச்சயமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இக்குறையை நிவர்த்தி செய்யும்.

தமிழ் திரைப்படங்களையும், அதன் பின்னால் உள்ள கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி, பாராட்டி, மகிழ்ந்து கொண்டாட ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா வரும் செப்டம்பர் 08 – 10, 2023 ரொரான்ரோவில் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான திரை அடையாளமாக, திரைக்களமாக, பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழே போட்டியிட்டு தகுதியுடையவர்கள் “விருதினையும், பரிசில்களையும், அங்கீகாரங்களையும்” பெற்றுக்கொள்வார்கள்.

உலகம் முழுவதும் வாழ்கின்ற திரை மற்றும் கலைஞர்களுக்கான மிகப் பெரிய திரையிடல், பயிட்சி, பட தயாரிப்பு உதவி களமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா அமையும்.

பல்வேறு பிரிவுகளில் திரையிடல் மற்றும் போட்டிக்குத் தெரிவாகும் திரைப்படப் போட்டிகளுக்கான விண்ணப்ப இறுதி திகதி இம் மாதம் August 2ம் திகதி.

விண்ணப்ப முடிவுத் திகதி : August 02, 2023 நிறைவுபெறும்.

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழாவின்(2023) போட்டிகளுக்கான பிரிவுகள் :

முழுநீளப் படங்கள்
குறும்படங்கள்
காணொளிகள்
ஆவணப்படங்கள்
இசை ஆல்பங்கள்
Feature Film
Long Short (All Genres)
Short (All Genres)
International Short Films
Documentary
Web Series
Music Video/Album
உங்கள் படைப்புகளை கீழே உள்ள இணைப்பினூடாக அனுப்பி வையுங்கள்!

https://filmfreeway.com/ttiff/

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.