Thalapathy Vijay

Top 10 People : 2018-ல் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் லிஸ்டில் தமிழ் சினிமாவில் இருந்து தளபதி விஜய் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

உலகத்தில் எது நடந்தாலும் அதனை உடனுக்குடன் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த பெரிதும் உதவுபவை சமூக வளையதளங்கள் தான்.

குறிப்பாக ட்விட்டர் அனைத்து தகவல்களையும் அலசி ஆராயும் இடமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது.

இதில் இந்த 2018-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 பிரபலங்கள் யார் என்ற லிஸ்டை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ள இந்த லிஸ்டில் தளபதி விஜய் 8-ம் இடத்தை பிடித்துள்ளார்.

அதே போல் அதிகம் பேசப்பட்ட moments-ல் சர்கார் படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருந்து என்பதை விட தமிழகத்தில் இருந்து இடம் பிடித்த ஒரே பிரபலம் தளபதி விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.