தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற அதிகப்பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதில் இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கின்றது.