
OTT-ல் துணிவு திரைப்படம் முதல் இடத்தை பிடித்த நிலையில் வாரிசு படத்தின் நிலை என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிப்பில் உருவான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவான வாரிசு என இரண்டு படங்களும் கடந்த பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படம் netflix தளத்தில் வெளியாகி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

தற்போது இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது. துணிவு படத்துக்கு முதலிடமும் வாரிசு படத்துக்கு இரண்டாம் இடமும் கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.