துணிவு படத்தில் செகண்ட் சிங்கிள் ட்ராக் குறித்து பதிவு செய்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மஞ்சு வாரியர், சமுத்திரகனி, சிபிச்சந்திரன், அமீர் மற்றும் பாவணி எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் சில்லாச்சில்லா என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 31ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய twitter பக்கத்தில் காசேதான் கடவுளடா என பதிவு செய்துள்ளார்.
நிச்சயம் இது துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் அப்டேட் ஆகத்தான் இருக்கும் என ரசிகர்கள் யூகித்துள்ளனர். காரணம் துணிவு திரைப்படம் பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கி விடுவதால் பாடலும் பணத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
விரைவில் செகண்ட் சிங்கிள் ட்ராக் குறித்த ரிலீஸ் தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.