அஜித்தின் துணிவு திரைப்படம் netflix OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் எச.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று பிரபல டிஜிட்டல் தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.